கோவில்பட்டி தொகுதியில் களம் காணும் டிடிவி தினகரன் இன்று தீவிர வாக்கு

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், தான் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் இன்று மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 6ம் ‍தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில், திரு. டிடிவி தினகரன், சூறாவளி பிரச்சாரம் ‍மேற்கொண்டு வருகிறார். செல்லுமிடம் எல்லாம் அவருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தான் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் இன்று அவர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

கடம்பூரில் மாலை 4.00 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கும் திரு. டிடிவி தினகரன், மாலை 4.45 மணிக்கு காமநாயக்கன்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 5.15 மணிக்கு கரிசல்குளத்திலும், 5.30 மணிக்கு பாண்டவர் மங்களத்திலும் ஆதரவு திரட்டுகிறார். காமராஜர் பள்ளி அருகே உள்ள ராஜிவ் நகரில் மாலை 5.45 மணிக்கு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் திரு. டிடிவி தினகரன், 6.15 மணிக்கு தெற்கு திட்டங்குளத்திலும், 6.40க்கு வடக்கு திட்டங்குளத்திலும், இரவு 7.10 மணிக்கு இலுப்பையூரணியிலும், 7.40 மணிக்கு செவக்காடு பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கோவில்பட்டியிலுள்ள அமமுக அலுவலகத்தில் இரவு 8.15 மணிக்கும், அத்தை கொண்டானில் இரவு 8.40 மணிக்கும் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.