கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைத்திருப்பதாக வரும் தகவலால் அதிர்ச்சி

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய , நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும்.

எனவே, இப்படியோர் உத்தரவு பிறப்பித்திருந்தால், பழனிசாமி அரசு அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வலியுறுத்தல்.