தியாகி திருப்பூர் குமரனின் 117வது பிறந்ததினம் அமமுக சார்பில் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 117வது பிறந்ததினத்தையொட்டி, திருப்பூரில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 117-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் மாநகர், புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், குமரன் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து குமரனின் துணைவியார் ராமாயி அம்மாள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மண்டலப் பொறுப்பாளரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான திரு.சி.சண்முகவேலு, தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் திருமதி விசாலாட்சி, மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.சிட்டிசன் ஈஸ்வரன், தெற்கு மாவட்டச் செயலாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.