மறைந்த திரு.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு கழக பொதுச்செயலாளர் இரங்கல்

அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தனகரன் அவர்கள் இன்று தனது டிவிட்டர் அறிக்கையில் மறைந்த திரு.க்ரியா ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த திரு.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

நவீன யுகத்திற்கு ஏற்ப தமிழுக்கான சொற்களைத் தேடித்தேடி சேகரித்து அவர் வெளியிட்ட அகராதிகளும், மேற்கொண்ட  தமிழ்ப்பணிகளும் எப்போதும் மறையாதவை. திரு.ராமகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.