மாவீரர் வீர பாண்டிய கட்டபொம்மன் சிலைகளுக்கு அமமுகவினர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் கழக சார்பில், பாண்டிபஜார் முன்பு அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு, கழக அமைப்பு செயலாளர் திரு. இ.மகேந்திரன், மாவட்ட கழக செயலாளர்கள் பேராசியர் திரு. மா.ஜெயபால், திரு. ஷ.ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஏ.பி.பால் கண்ணன், மாநில தொழிற்சங்க பேரவை பொருளாளர் நெல்லை திரு. பரமசிவம் ஆகியோர் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், பகுதி கழக செயலாளர்கள் திரு. ரமேஷ், ஹைதர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், நொச்சிபாளையம் பிரிவு பகுதியில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப் படத்திற்கு, தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஜோதிமணி தலைமையில், மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் திரு. உடையாளி முன்னிலையில் கழகத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாநில இளைஞர் பாசறை துணைத்தலைவர் திரு. ஏ.கே.சாமிநாதன், அம்மா பேரவை இணை செயலாளர் திரு. மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம் போடி நகர் கழகம் சார்பில், போடி நகர் கழக செயலாளர் திரு. S.V.C. ஞானவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், போடி வள்ளுவர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று, அரண்மனை வீதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தெற்கு மாவட்ட அமமுக பொருளாளர் திரு. குமார், போடி நகர துணைச் செயலாளர் திரு. முந்தல் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கட்டபொம்மன் நகர் பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு, கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாநில மகளிரணி துணைச் செயலாளர் திரும‌தி. சண்முககுமாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. எட்வின் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.