கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் விபத்தில் கடைகள் தீக்கிரையான நிகழ்வு

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் கடைகள் தீக்கிரையான நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது. கொரோனா சூழலுக்குப்பிறகு வியாபாரம் மெல்ல தொடங்கியிருந்த நேரத்தில், நேரிட்டிருக்கும் இத் தீ விபத்தினால் கடை உரிமையாளர்கள் மொத்தமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்.

அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்குவதுடன், வங்கிக் கடன் உதவியும் ஏற்பாடு செய்து தரவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட வியாபாரிகளிடமிருந்து கடை வாடகை வசூலிப்பதை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.