தொலைக்காட்சியின் செய்தியாளர் கொலை டிடிவி தினகரன் கடும் கண்டனம்

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில்,

ஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.மோசஸ், கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டபோதே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் படுகொலையைத்  தடுத்திருக்கலாம் எனவும்.    

இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து தண்டனை பெற்றுத்தருவதிலாவது காவல்துறை போதிய கவனம் செலுத்தவேண்டும்.கொல்லப்பட்ட செய்தியாளர் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்கிடவேண்டும்.திரு.மோசஸ் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிதுள்ளார்.