பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு பொதுச்செயலாளர் இரங்கல்

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் திரு.மன்னர் மன்னன் மறைவுக்‍கு அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


திரு.டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழின் தனிப்பெரும் அடையாளமான பாவேந்தர் பாரதிதாசனின் அன்பு மகன் கவிமாமணி திரு.மன்னர் மன்னன் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். தந்தையின் வழியில் மொழி போராட்டத் தியாகியாக, தமிழறிஞராக, 50-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவராகத் திகழ்ந்த மன்னர் மன்னனின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை திரு.டிடிவி தினகரன் தெரிவித்துக்‍ கொண்டுள்ளார்.