மூத்தப் பத்திரிகையாளர் திரு.சுதாங்கன் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல்

திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், மூத்தப் பத்திரிகையாளர் திரு.சுதாங்கன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.