கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி உருவாக்‍கம்

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி உருவாக்‍கப்படுவதாக, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் அதிகரித்து வருவதாகவும், இதற்கான இயக்‍கங்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தனிமனிதரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்‍கறையோடு செயல்பட வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நம்முடைய நல்வாழ்வுக்‍காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், அதுதொடர்பான விழிப்புணர்வு எல்லாத் தரப்பினரிடமும் ஏற்படுத்துவதும் அவசியமாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வகையான வளங்கள், நீர்நிலைகள் உட்பட இயற்கை நமக்‍கு வழங்கிய கொடைகளை எல்லாம் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினருக்‍கு அளிக்‍க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் இருக்‍கிறது - இதற்காக அரசியலிலும் சுற்றுச்சூழலுக்‍கான கூடுதல் முக்‍கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டியுள்ளது என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எனவே, நம்முடைய மண்ணுக்‍கும் மக்‍களுக்‍கும் தேவையானவற்றைப் பற்றி சிந்திப்பதிலும், செயல்படுவதிலும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில், தனித்துவமாக செயல்படும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தின் சார்பு அணிகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு இன்றுமுதல் உருவாக்‍கப்படுவதாக திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதன் தலைவராக திரு.தாம்பரம் நாராயணனும், செயலாளராக வழக்‍கறிஞர் திரு.A. நல்லதுரையும் நியமிக்‍கப்படுவதாகவும், கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும், கழகத்தினரும் இவர்களுக்‍கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

முழு அறிவிப்பு: