புரட்சித்தலைவரின் திரு உருவ சிலை சேதம் டிடிவி தினகரன் கண்டனம்

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரு உருவ சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மா உணவகத்தை சேதப்படுத்துவது, புரட்சித்தலைவரின் சிலையை உடைப்பது என தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்தடுத்து நிகழும் அராஜகங்கள், அக்கட்சியை "தீயசக்தி" என எங்கள் தலைவர்கள் அடையாளம் காட்டியதற்குச்  சாட்சியாக அமைந்திருக்கின்றன.

இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.