விவசாயிகளின் பிரச்னையைச் சுமூகமாக பேசி, போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்னையைச் சுமூகமாக பேசித் தீர்ப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து, போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளை, தொடர்ந்து இப்படி கொட்டுகிற பனியிலும், மோசமான தட்பவெப்பத்திலும் போராட வைப்பது சரியானதல்ல என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார். மத்திய அரசு இப்பிரச்னையை சுமூகமாகப் பேசி தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்து, விவசாயப் பெருமக்களின் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.