சின்னம்மா உடல்நலம் பெற ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் வழிபாடு

தியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை குருசடி தேவாலயத்தில் கழகம் சார்பில் சிறப்பு பிரத்தனை நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன், அமைப்பு செயலாளர் தேனாடு திரு.லட்சுமணன், மாவட்ட அவை தலைவர் திரு. துரை, நகர செயலளர் திரு.ரமேஷ், ஒன்றிய செயலாளர் திரு. மணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக சார்பில் மாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன் தலைமையில் அறுபடை வீடுகளில் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சுவாமிக்கு மல்லிகை, தாமரை இதழ், உள்ளிட்ட மலர்களால் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கழக அம்மாபேரவை இணைசெயலாளர் திரு.செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மதுரை மாநகர் வடக்கு மேற்கு 1ஆம் பகுதி கழக சார்பில் மாவட்ட செயலாளர் பேராசியர் மா.ஜெயபால் தலைமையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பகுதி கழக செயலாளர் மாவூத்து திரு. வேலவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் கழகம் சார்பில் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளி அம்மன் ஆலயத்தில், மாவட்ட செயலாளர் திரு.எஸ்.கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட அவைத் தலைவர் திரு. மோகன், மாவட்ட இணைச் செயலாளர் திருமதி.கௌரி ஜெயராமன், ஒன்றிய கழக செயலாளர் திரு. ஜெயக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பழமை வாய்ந்த மஸ்தான் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர் திரு. சித்திக் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்வில் காரைக்கால் மாவட்ட செயலாளர் திரு. தர்பாரண்யம், மாவட்ட அவைத் தலைவர் ஆடிட்டர் சாகுல் ஹமீது கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.