மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டி சின்னம்மா பிரார்த்தனை

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள நாகநாதர் திருக்‍கோயில், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா ஆகிய வழிபாட்டுத்தலங்களில், தியாகத்தலைவி சின்னம்மா வழிபாடு செய்தார். மக்‍கள் அனைவரும் நலமாக இருக்‍க வேண்டி பிராத்தித்ததாக சின்னம்மா​தெரிவித்தார்.

தியாகத்தலைவி சின்னம்மா, அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அங்குள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீதிருநாகவள்ளி அம்பாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஸ்ரீ ராகுபகவானுக்கு நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் சின்னம்மா கலந்து கொண்டார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், சின்னம்மாவுக்‍கு வணக்கம் தெரிவித்ததுடன், புகைப்படமும் எடுத்துக்‍ கொண்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகத்தலைவி சின்னம்மா, மக்‍கள் அனைவரும் நலமாக இருக்‍க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு யாகத்தில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், தியாகத்தலைவி சின்னம்மா பிரார்த்தனை செய்தார். பேராலயத்திற்கு வருகை தந்த சின்னம்மாவுக்‍கு, பேராயர்கள், மாதா சொரூபத்தை பரிசாக வழங்கினர். சின்னம்மா வருகையையொட்டி, பேராலயத்தில் கூடியிருந்த பக்‍தர்கள் மற்றும் பொதுமக்‍கள், சின்னம்மாவுக்‍கு வணக்‍கம் தெரிவித்தும், புகைப்படம் எடுத்துக்‍கொண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நாகூர் தர்காவுக்‍கு வருகை தந்த தியாகத்தலைவி சின்னம்மா, இஸ்லாமியர்களின் முறைப்படி நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டார்.