சின்னம்மா நலம்பெற திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் அமமுகவினர் வழிபாடு

தியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்டம், பாண்டியன் நகர் பகுதி, 4வது வார்டு கழகம் சார்பில், நெருப்பெரிச்சல் பகவதி அம்மன் திருக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மாவட்ட அவைத் தலைவர் திரு. பாலுசாமி, மாவட்ட இணைச் செயலாளர் கோமதி, பகுதி செயலாளர்கள் திரு. விஸ்வநாதன், திரு. எஸ்.எஸ். ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழுப்புரம் வடக்கு மாவட்டம், வல்லம் தெற்கு ஒன்றியக்‍ கழகம் சார்பில், மேல்சேவூர் மங்களாம்பிகை சமேத ரிஷபபுரீஸ்வரர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. கெளதம் சாகர், ஒன்றியச் செயலாளர் திரு. அருணகிரி கண்ணா, மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் திரு. குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

விழுப்புரம் தெற்கு மாவட்டம் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியக்‍ கழகம் சார்பில் பனையபுரத்தில் அமைந்துள்ள சத்யாம்பிகை சமேத பனங்காட்டு ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி பனங்காட்டு ஈஸ்வரருக்கும், சத்யாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.அய்யனார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம், புத்தமங்கலம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கழக விவசாயப்பிரிவு துணைச் செயலாளர் திரு. ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், மாணவரணி செயலாளர் திரு. பாலாஜி, இளைஞர் பாசறை செயலாளர் திரு. ஸ்ரீதர், மணல்மேடு பேரூர் செயலாளர் திரு. சின்னராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

திருச்சி மாநகர் மாவட்டக்‍ கழகம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி சார்பில், திருச்சி சங்கிலியாண்டபுரம் செல்வகாளியம்மன் திருக்கோவிலில், மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. ஜெ. சீனிவாசன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு. சொக்கலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் திரு. ராமலிங்கம், இளைஞர் பாசறை மாநில தலைவர் திரு. ஜோதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில், கழக அமைப்பு செயலாளர் திரு. சு. பாஸ்கர் தலைமையில், பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திரு. S.P. ஜவகர் பாபு, நகர கழகச் செயலாளர் திரு. V.M பாண்டியராஜன் முன்னிலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நகர துணை செயலாளர்கள் திரு. மரியோ எம்.ராஜேந்திரன், சாந்தி குணசேகரன், தஞ்சை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் திரு. ராதா கண்ணன் உஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.