தியாகத்தலைவி சின்னம்மா அஇஅதிமுக-வை நிச்சயம் மீட்டெடுப்பார்

தியாகத்தலைவி சின்னம்மா அஇஅதிமுக-வை நிச்சயம் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்‍கை இருப்பதாக சின்னம்மாவின் உறவினரும், ஜெயா தொலைக்‍காட்சியின் தலைமை செயல் அதிகாரியுமான திரு. விவேக்‍ ஜெயராமன் உறுதிப்பட தெரிவித்தார்.

பிரபல தனியார் ஆங்கில தொலைக்‍காட்சிக்‍கு திரு. விவேக்‍ ஜெயராமன் பேட்டி அளித்தார். சின்னம்மாவுக்‍கு கழகத்தினரும், பொதுமக்‍களும் திரண்டு 23 மணி நேரம் வரவேற்பு அளித்தது தொடர்பான கேள்விக்‍கு பதில் அளித்த திரு. விவேக்‍ ஜெயராமன், தான் இதனை வெறும் 23 மணி நேரமாக பார்க்‍கவில்லை என்றும், அதிமுகவுக்காக சின்னம்மா 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை ஆற்றிய சேவையாகத்தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சின்னம்மா அஇஅதிமுக-வை மீட்டெடுப்பார்களா என்ற கேள்விக்‍கு பதில் அளித்த அவர், அவருக்‍கு அந்த நம்பிக்‍கை உண்டு என்றும், வரும் காலங்களில் அவர் என்ன செய்வார் என்பதை செயலில் காட்டுவார் என்றும் திரு. விவேக்‍ ஜெயராமன் கூறினார்.