சின்னம்மா பூரண நலம் பெற சென்னையில் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜை

தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் பூரண நலம் பெற சென்னையில் பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

தென்சென்னை வடக்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி கழகம் சார்பில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நாகத்தம்மன் கோயிலில் விருகம்பாக்கம் பகுதி செயலாளர் திரு. M.குணசீலன் தலைமையில் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திரு ஆர் சுந்தர்ராஜன் முன்னிலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் திரு.விதுபாலன், திரு. ரவிபாண்டியன், திரு. நீதிபதி, திரு.கே.எஸ். ராஜன், பகுதி இளைஞரணி செயலாளர் திரு. TSP ரமேஷ், பகுதி மகளிரணி செயலாளர் திருமதி. ரஞ்சனி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தென்சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பாடசாலை திரு. கே.பழனி, சைதை பகுதி அமைப்புச்சார பகுதிக்கழக செயலாளர் திரு. ஜி.என். பழனியப்பன் ஏற்பாட்டில், ஜாபர்கான் பேட்டையில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 108 தேங்காய்கள் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. கழக துணை பொதுச்செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. ஜி. செந்தமிழன் கலந்துக் கொண்டு அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு சங்கர், மகளிரணி செயலாளர் திருமதி வச்சலா, பகுதி இணைச் செயலாளர் திரு என்எஸ் குட்டி, பகுதி கழக துணைச் செயலாளர் திரு. எஸ் வீரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தென் சென்னை தெற்கு மாவட்டம் சைதை பகுதி கழக செயலாளர் திரு ஜி.கந்தன் தலைமையில், 140-வது வட்ட பொறுப்பாளர் திரு.V. முருகன் ஏற்பாட்டில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. திரு. T.N. ராஜகணேஷ், திரு. S. சம்பத்குமார், திரு. சோமு, திரு. ஈகை k. குப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென் சென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு 139-வது வட்ட செயலாளர் திரு. எம் உதயகுமார் ஏற்பாட்டில், சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 108 தேங்காய் உடைத்து கழக நிர்வாகிகள் வழிபாடு நடத்தினர்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயிலில் தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.ஜி.செந்தமிழன், மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.எல்.ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.எம்.தனம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

தென் சென்னை கிழக்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி கழகம் சார்பில் பாம்பன் சுவாமிகள் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தியாகத் தலைவி சின்னம்மா பூரண நலம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நீலாங்கரை திரு.எம்.சி.முனுசாமி, கழக இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி. கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் திருவான்மியூர் திரு.எஸ்.முருகன், மாணவரணி நிர்வாகி திரு.ஜி.எம்.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.