அமமுக வினர் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு நாளை கடைசி நாள்

சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று மூன்றாம் நாளாக நடைபெற்றது. நேற்று பிற்பகல் வரை ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்களை கழகத்தினர் பெற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் அமமுக தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. அமமுக சார்பில் போட்டியிட விரும்பும் ஏராளமான கழக தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகுந்த ஆர்வத்துடன் மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்றனர். மூன்றாம் நாளாக நேற்றும் காலையிலிருந்தே கழகத்தினர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றும் அவற்றை பூர்த்தி செய்தும் அலுவலகத்தில் வழங்கி வருகின்றனர். ஏராளமான பெண்களும் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை பெற்று வருகின்றனர். பிற்பகல் வரை ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மனுக்களை கழகத்தினர் பெற்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளைக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.