அ.ம.மு.க. சார்பில் 4வது நாளாக படிவங்களை பெற ஆர்வத்துடன் குவிந்த தொண்டர்கள்

சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் போட்டியிட 4-வது நாளாக இன்று கழகத்தினர், தலைமைக்‍கழகத்தில் ஆர்வத்துடன் விருப்ப மனுக்‍களைப் பெற்றுக்‍கொண்டு பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமை அலுவலகத்தில், விருப்ப மனுக்‍கள் விநியோகம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. 4வது நாளாக இன்று விருப்ப மனுக்‍கள் வழங்கப்பட்டு வருகின்றன. அ.ம.மு.க. சார்பில் போட்டியிட கழகத்தினர் மிகுந்த ஆர்வத்துடன் மனுக்‍களைப் பெற்றுக்‍கொண்டு ர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.