அ.ம.மு.க. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தமிழகத்தின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்களும், கூட்டணிக்‍ கட்சிகளின் வேட்பாளர்களும், தங்கள் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. தங்க.சரவணன் தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கூர், கருப்புக்கால், குன்னத்தூர், களிமங்களம், சக்குடி, அங்காடிமங்களம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட ஊர்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிராம மக்கள் வெடி வெடித்து, ஆராத்தி எடுத்தும் அவரஒ வரவேற்றனர். கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, மருது சேனை, எஸ்டிபிஐ, கோகுல மக்கள் கட்சி ,ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர் குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிடும் திருமதி. சி. கலாராணிக்கு குக்கர் சின்னத்தில் வாக்குக் கேட்டு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு முதல் 30 -வது வார்டு வரையில் உள்ள பகுதிகளில் கழக நிர்வாகிகள் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக துணைத் தலைவரும் வடக்கு மாவட்டசெயலாளருமான திரு. எஸ்.அன்பழகன், தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து வடுகம் முனியப்பன்பாளையம், அய்யம்பாளையம், காட்டூர், ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.லட்சுமி நாராயணன், தொகுதிக்குட்பட்ட 35 வது வட்டத்தில் உள்ள முத்தமிழ் நகரில் மார்கெட்டில் உள்ள சிறுகடைமற்றும் நடைபாதை கடை வியாபாரிகளிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் மேலும் முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு கருணாநிதி தெரு, உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அதேபோல் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.ஆறுமுகம் தொகுதிக்குபட்ட 66 வட்டம் திருவிக நகர் பகுதியில் உள்ள தேவகி அம்மாள் தெரு, நாகம்மாள் தெரு, சாமுண்டீஸ்வரி தெரு, தியாகராஜன் தெரு, சிவலிங்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். கழக மற்றும் கூட்டணி நிர்வாகிகளும் அவருடன் வாக்கு சேகரித்தனர்.