கழகம் சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Roll Visuals அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மண்ணாடிப்பட்டு தொகுதியில், திரு. C. தனவேலு, ஊசுடு தொகுதியில், திரு. முத்தாலு வெங்கடேசன், தட்டாஞ்சாவடியில் திருமதி B. விமலா ஸ்ரீ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காமராஜ் நகர் தொகுதியில் திரு. L. முனுசாமி, உப்பளம் தொகுதியில் திரு. M. பாஸ்கர், தனித்தொகுதியான நெட்டப்பாக்கத்தில், திரு. M. செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாகூர் தொகுதியில் திரு. பா. வேல்முருகன், நெடுங்காடு தனித்தொகுதியில், திரு. I. ராஜேந்திரன், திருநள்ளாறு தொகுதியில், திரு. P. தர்பாரண்யம் ஆகியோர், கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.