அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25ம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மாவின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடிவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ். அன்பழகன் தலைமையில் வரும் 25ம் தேதி, வியாழக்‍கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக திரு.டிடிவி.தினகரன் கூறியுள்ளார். கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு கலந்துகொள்ள வேண்டும் எனவும் திரு.டிடிவி. தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.