பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி கழகத்தினர் மரியாதை

தருமபுரி கிழக்‍கு மாவட்ட கழகம் சார்பாக, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கட சமுத்திரம் கிராமத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்‍கு, கழக துணைப் பொதுச் செயலாளரும், தருமபுரி கிழக்‍கு மாவட்ட கழக செயலாளருமான திரு.பி.பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாண்புமிகு அம்மா அவர்களால், பெரியார் விருது வழங்கி கௌரவிக்‍கப்பட்ட திரு.வி.ஆர்.வேங்கனுக்‍கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.பி.பழனியப்பன் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர் அருர் திரு.ஆர்.ஆர்.முருகன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் திரு.கௌதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை வேளச்சேரி பகுதி அமமுக சார்பில் தந்தை பெரியாரியாரின் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தப்பட்டது. தரமணியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திரு. சந்திரபோஸ் தலைமையில் கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கழக மாணவரணி செயலாளர் திரு. J.D. கார்த்திக், தென்சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு கழகச் செயலாளர் திரு.ஜிம். பாஷா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பரங்கிமலை ஒன்றிய கழகம் சார்பில், மேடவாக்கத்தில், பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் திரு.கு.காளிதாஸ் தலைமையில் கழக நிர்வாகிகள் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேடவாக்கம் ஊராட்சி கழக செயலாளர் தி.கு.செல்வகுமார் அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.சீனிவாசன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகரக்‍ கழகம் சார்பில், மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பூக்‍கடை திரு.சேகர் தலைமையில், எடப்பாடி பேருந்து நிலையத்திலும், சேலம் புறநகர் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜேந்திரன் தலைமையிலும், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.