அ.ம.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நிறைவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு விண்ணப்ப படிவம் அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. தலைமைக்கழக அலுவலகத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு அம்மா திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்‍கோட்டை, அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்‍கல், கரூர், திருவாரூர், சேலம், விழுப்புரம், கள்ளக்‍குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கழகத்தினருக்‍கான நேர்காணல் நடைபெற்றது. முதற்கட்டமாக கழக அமைப்பு ரீதியாக செயல்படும் 54 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.