அ.ம.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் இன்று நேர்காணல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று தொடங்கியது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு விண்ணப்ப படிவம் அளித்தவர்களுக்கான நேர்காணல், இன்றும், நாளையும் சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது. தலைமைக்கழக அலுவலகத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு அம்மா திருவுருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வடசென்னை கிழக்கு, கடலூர் வடக்கு மாவட்டம் வரை கழக ரீதியாக செயல்படும் 54 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.