கழக கூட்டணி வேட்பாளர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்யும் உத்வேகத்துடன், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்கள், தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். செல்லுமிடமெல்லாம் அவர்களுக்‍கு, பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தவண்ணம் உள்ளனர்.

பொன்னேரி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் பொன் ராஜா, ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று, தேர்தல் அறிக்கை குறித்த பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, குக்‍கர் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு, பல்வேறு தரப்பு மக்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரு.டிடிவி தினகனுக்‍கு ஆதரவு கேட்டு, கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு. எஸ்.சி.எஸ்.பி மாணிக்கராஜா தலைமையில், கழகத்தினர் பருப்புக்கோட்டை, சிவஞானபுரம், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி அமமுக ‌வேட்பாளர் சி.விஜயகுமார், சேத்பட் ஒன்றியத்திற்கு உட்பட்ட மன்சுராபாத், முடையூர், அரும்புலியூர், மட்டபிறை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியில் பொது மக்களுக்கு குக்கர் சின்னம் அறிமுகம் செய்து பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். போளூர் தொகுதியில் நவீன பூங்கா, விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கழக வேட்பாளர் வாக்‍குறுதி அளித்தார்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் கழகம் வேட்பாளர் திரு.ஆர்.பாலசுந்தரம், தோகைப்பாடி, நன்னாடு, வெங்கடேசபுரம், வேடம்பட்டு, கொண்டங்கி, ஒருகோடி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.