மாண்புமிகு அம்மா அறிவித்த திட்டங்களை இபிஎஸ் அரசு முடக்கிவிட்டது

மாண்புமிகு அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் எடப்பாடி அரசு முடக்கிவிட்டதாக, கழக கொள்கை பரப்பு செயலாளர் செல்வி.சி.ஆர்.சரஸ்வதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.என்.ஜி.பார்த்திபனை ஆதரித்து, கழக அமைப்பு செயலாளர் திரு.சி.கோபால் தலைமையில், சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கழக கொள்கை பரப்பு செயலாளர் செல்வி.சி.ஆர்.சரஸ்வதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முட்டி போட்டு முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி தான் என விமர்சித்தார். முதலமைச்சர் பதவியை கொடுத்த சின்னம்மாவை இபிஎஸ் மறந்துவிட்டதாகவும் சி.ஆர்.சரஸ்வதி குற்றஞ்சாட்டினார்.