அமெரிக்க முதல் பெண் துணை அதிபருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில்,

அமெரிக்க வரலாற்றில் முதல்  பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியைச்  சேர்ந்த திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மனப்பூர்வமான  வாழ்த்துகள்.

அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே உள்ள  துளசேந்திரபுரம் கிராமத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமையட்டும் என தெரிவிதுள்ளார்.