கழக வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பு

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்‍கான களப்பணி, கழக வளர்ச்சிப் பணி, புதிய உறுப்பினர் சேர்க்‍கை ஆகியன குறித்த ஆலோசனைக்‍ கூட்டங்கள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில், கழக அமைப்பு செயலாரும், மாவட்ட கழக செயலாருமான திரு. இ.மகேந்திரன் தலைமையில் உசிலம்பட்டியில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இதில், கழகத்தில் புதிதாக உறுப்பினர்களை இணைப்பது குறித்தும், கழக பணிகள் குறித்தும் ஆலோசிக்‍கப்பட்டு, நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில், குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பி.முத்தையா முன்னிலையில், மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருராட்சி கழகம் சார்பில், உறுப்பினர் சேர்க்கை படிவங்களை, காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் மொளச்சூர் திரு. இரா பெருமாள், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொருளாளர் திரு. கே.எஸ். சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக, கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில், கழக அமைப்பு செயலாளரும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான திரு.கே.எஸ்.கே.பாலமுருகன் பங்கேற்று, உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் வீரப்பன் சத்திரம் கிழக்கு பகுதி கழகம் சார்பில், கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. டி.தங்கராஜ் பங்கேற்று, நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.