சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான கழக ஆய்வுக்குழுக்‍கள் அமைப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்‍கை குறித்து கருத்து கேட்பதற்காக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் ஆய்வுக் குழுக்‍கள் அமைக்‍கப்பட்டுள்ளதாக, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். வரும் 27ம் தேதிமுதல், இக்‍குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முழு விவரம் இங்கே டவுன்லோட் செய்யவும்: 

 

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், வரவிருக்‍கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்வதற்கும், கழகத்தின் சார்பில் வெளியிடவுள்ள தேர்தல் அறிக்‍கை குறித்து கழகத்தினரிடமும், பொதுமக்‍களிடமும் கருத்து கேட்பதற்காகவும், கழகத்தின் சார்பில் ஆய்வுக்‍குழுக்‍கள் அமைக்‍கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இக்‍குழுவினர், வரும் 27ம் தேதிமுதல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரும் 27ம் தேதி, அரியலூர், தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் வடக்‍கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டங்களில் கழகத்தினர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்‍கு, மண்டலப் பொறுப்பாளராக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி, ஆய்வுக்‍குழுவில் கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.I. மகேந்திரன், திரு.R. பாலசுந்தரம் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதேபோல், ஈரோடு மாநகர் கிழக்‍கு, ஈரோடு மாநகர் மேற்கு, ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர் வடக்‍கு, திருப்பூர் புறநகர் தெற்கு, திருப்பூர் புறநகர் ஆகிய மாவட்டங்களுக்‍கு மண்டலப் பொறுப்பாளர்களாக கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.​C. சண்முகவேலு, கழக அமைப்புச் செயலாளர் திரு.சேலஞ்சர் துரை மற்றும் ஆய்வுக்‍குழுவினராக துணைப் பொதுச்செயலாளர் திரு.P. பழனியப்பன், அமைப்புச் செயலாளர்கள் திரு.P.G. நாராயணன், வீரபாண்டி திரு.S.K. செல்வம், டாக்‍டர் இல.கதிர்காமு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்‍கு மண்டலப் பொறுப்பாளர்களாக பொறியாளர் அணிச் செயலாளர் திரு.ம.கரிகாலன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச்செயலாளர் திரு.T.A.ஏழுமலை ஆகியோரும், ஆய்வுக்‍குழுவினராக துணைப் பொதுச்செயலாளர் திரு.G. செந்தமிழன், கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, அமைப்புச் செயலாளர்கள் திரு.R. சுந்தரராஜ், திரு.நேதாஜி கணேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்‍கு மண்டலப் பொறுப்பாளர்களாக கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.N.G. பார்த்திபன், திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் திரு.R. பாலசுப்ரமணியம், வேலூர் புறநகர் மாவட்டச்செயலாளர் திருமதி C.ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரும், ஆய்வுக்‍குழுவினராக கழகப் பொருளாளர் திரு.R. மனோகரன், அமைப்புச் செயலாளர்கள் அரூர் திரு.R.R. முருகன், திரு.K.S.K. பாலமுருகன், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு.K. தம்பி இஸ்மாயில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விருதுநகர் கிழக்‍கு, விருதுநகர் மத்தியம், விருதுநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்‍கு மண்டலப் பொறுப்பாளராக, ஒன்றியக்‍குழு பெருந்தலைவரும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளருமான திரு.S.V.S.P. மாணிக்‍கராஜா மற்றும் ஆய்வுக்‍குழுவினராக தலைமை நிலையச் செயலாளர் திரு.K.K. உமாதேவன், இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.S. மாரியப்பன் கென்னடி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு.கா.டேவிட் அண்ணாதுரை, கழக வர்த்தகர் அணிச்செயலாளர் திரு.M. செளந்தரபாண்டியன் இடம்பெற்றுள்ளனர்.

வரும் 28ம் தேதி, கோவை கிழக்‍கு, கோவை மேற்கு, கோவை மத்தியம், கோவை வடக்‍கு, கோவை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்‍கு, மண்டலப் பொறுப்பாளர்களாக திரு.C. சண்முகவேலு, திரு.சேலஞ்சர் துரை ஆகியோரும், ஆய்வுக்‍குழுவினராக திரு.P. பழனியப்பன், வீரபாண்டி திரு.S.K. செல்வம், டாக்‍டர் இல.கதிர்காமு, கழக அமைப்புச் செயலாளர் தேனாடு திரு.T. லட்சுமணன் இடம்பெற்றுள்ளனர்.

புதுக்‍கோட்டை வடக்‍கு, புதுக்‍கோட்டை மத்தியம், புதுக்‍கோட்டை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்‍கு மண்டலப் பொறுப்பாளராக திரு.M. ரெங்கசாமி, ஆய்வுக்‍குழுவினராக கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.வ.து.நடராஜன், திரு.ஐ. மகேந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் டாக்‍டர் எஸ்.முத்தையா, அமைப்புச்செயலாளர்கள் திருமதி சாருபாலா R. தொண்டைமான், திரு.S.K. தேவதாஸ், திரு.S.G. செங்கொடியான், விழுப்புரம் தெற்கு மாவட்டச்செயலாளர் திரு.R. பாலசுந்தரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல், செங்கல்பட்டு வடக்‍கு, செங்கல்பட்டு தெற்கு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்‍கு மண்டலப் பொறுப்பாளர்களாக திரு.ம.கரிகாலன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.M. கோதண்டபாணி, ஆய்வுக்‍குழுவினராக திரு.G.செந்தமிழன், செல்வி C.R.சரஸ்வதி, திரு.R. சுந்தரராஜ், கழக அமைப்புச் செயலாளர் திருவான்மியூர் திரு.எஸ். முருகன், நெசவாளர் அணிச் செயலாளர் திரு. தரணி A. சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை வடக்‍கு, திருவண்ணாமலை மத்தியம், திருவண்ணாமலை தெற்கு மண்டலப் பொறுப்பாளராக திரு.N.G. பார்த்திபன், ஆய்வுக்‍குழுவினராக திரு.R. மனோகரன், அமைப்புச் செயலாளர்கள் திரு.C.கோபால், அரூர் திரு.R.R. முருகன், திரு.K.S.K. பாலமுருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தூத்துக்‍குடி வடக்‍கு, தூத்துக்‍குடி தெற்கு, கன்னியாகுமரி​கிழக்‍கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களுக்‍கு மண்டலப் பொறுப்பாளராக திரு.S.V.S.P. மாணிக்‍கராஜா, ஆய்வுக்‍குழுவினராக திரு.K.K. உமாதேவன், திரு.எஸ். மாரியப்பன் கென்னடி, கழக அமைப்புச் செயலாளர் திரு.A. கிங்ஸ்லி ஜெரால்டு, திரு.கா.டேவிட் அண்ணாதுரை, இலக்‍கிய அணிச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.கே.துரை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி கிருஷ்ணகுமாரி என்கிற கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவுச் செயலாளர் திருமதி M.R. ஜெமீலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வரும் 29-ம் தேதியன்று, நீலகிரி மாவட்டத்திற்கு கழகத்தினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த மாவட்டத்திற்கு மண்டலப் பொறுப்பாளர்களாக கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.C.சண்முகவேலுவும், கழக அமைப்புச் செயலாளர் திரு.சேலஞ்சர் துரை என்கிற திரு.R.துரைசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.P.பழனியப்பன், கழக அமைப்பு செயலாளர்கள் வீரபாண்டி திரு.S.K.செல்வம், டாக்டர். இல.கதிர்காமு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நாகப்பட்டினம் வடக்கு, நாகப்பட்டினம் தெற்கு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மண்டலப் பொறுப்பாளராக கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.M.ரெங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வுக்குழுவில், கழக அமைப்பு செயலாளர் திரு.I.மகேந்திரன், கழக மருத்துவரணி செயலாளர் டாக்டர்.S.முத்தையா, கழக அமைப்பு செயலாளர் திரு.பொன்.த.மனோகரன், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர், திரு.R.பாலசுந்தரம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர் வடக்கு, திருநெல்வேலி புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.S.V.S.P.மாணிக்கராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வுக்குழுவில், கழக தலைமை நிலையச் செயலாளர், திரு.K.K.உமாதேவன், கழக மகளிர் அணி செயலாளர் திருமதி.வளர்மதி ஜெபராஜ், கழக இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.S.மாரியப்பன் கென்னடி, கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.கா.டேவிட் அண்ணாதுரை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வரும் 30-ம் தேதியன்று, வடசென்னை வடக்கு கிழக்கு, வடசென்னை வடக்கு மேற்கு, வடசென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களில், கழகத்தினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.G.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழுவில், கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி C.R.சரஸ்வதி, கழக பொறியாளர் அணி செயலாளர் திரு.ம.கரிகாலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதே தினத்தன்று, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மத்தியம், கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு ஆகிய மாவட்டங்களில், மண்டல பொறுப்பாளர் திரு.P.பழனியப்பனும், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.C.சண்முகவேலு, கழக அமைப்பு செயலாளர்கள் திரு. K.பாண்டுரங்கன், திரு.I.மகேந்திரன், கழக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.S.முத்தையா கொண்ட ஆய்வுக்குழுவினரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, கடலூர் வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக கழக அமைப்பு செயலாளர் திரு.K.S.K.பாலமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாவட்டங்களில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.M.ரெங்கசாமி, கழக அமைப்புச் செயலாளர் வானூர் திரு.N.கணபதி, கழக மீனவரணி செயலாளர் திரு.T.ஆறுமுகம் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.பாலசுந்தரம், கழக இளைஞர் பாசறை செயலாளர் திரு.ஜெ.கொ.சிவா ஆகியோர், வரும் 30-ம் தேதியன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

பெரம்பலூர் மற்றும் கரூர் கிழக்கு ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக கழக பொருளாளர் திரு.R.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாவட்டங்களில் கழக அமைப்பு செயலாளர்கள் திரு.R.தங்கதுரை, பண்ணைவயல் திரு.சு. பாஸ்கர், திரு.கா.டேவிட் அண்ணாதுரை ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் வரும் 30-ம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு, மதுரை புறநகர் வடக்கு, மதுரை புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளர்களாக திரு.K.K.உமாதேவன், திரு.S.மாரியப்பன் கென்னடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழுவில், திரு.S.V.S.P.மாணிக்கராஜா, கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.N.G.பார்த்திபன், டாக்டர்.இல.கதிர்காமு, கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.இரா.ஹென்றி தாமஸ், திரு.A.P.பால்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 1-ம் தேதியன்று, சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடக்கு ஆகிய மாவட்டங்களில் கழகத்தினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளர்களாக திரு.P.பழனியப்பன், வீரபாண்டி திரு.S.K.செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழுவில், திரு.S.அன்பழகன், திரு.C.சண்முகவேலு, கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.P.S.அருள், அரூர் திரு.R.R.முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.R.பாலசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழுவில் திரு.M.ரெங்கசாமி, டாக்டர்.S.முத்தையா, கழக அமைப்பு செயலாளர் திரு.K.S.K.பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டிசம்பர் 1-ம் தேதி, தென்சென்னை வடக்கு மற்றும் தென்சென்னை தெற்கு மாவட்டங்களில் அமமுகவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த மாவட்டங்களுக்கு, மண்டல பொறுப்பாளராக கழக துணைப் பொதுச்செயலாளர், திரு.G.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வுக்குழுவில், கழக கொள்கை பரப்பு செயலாளர், செல்வி C.R.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளர் திரு.R.சுந்தரராஜ், நடிகர் திரு.செந்தில், கழக பொறியாளர் அணி செயலாளர் திரு.ம.கரிகாலன், கழக மாணவரணி செயலாளர் அண்ணாநகர் திரு.R.பரணீஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 1-ம் தேதி திருச்சி மாநகர், திருச்சி வடக்கு மற்றும் திருச்சி தெற்கு மாவட்டங்களில் அமமுகவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த மாவட்டங்களுக்கு, கழக பொருளாளர் திரு.R.மனோகரன் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வுக்குழுவில், கழக அம்மா பேரவை செயலாளர் திரு.S.மாரியப்பன் கென்னடி, கழக அமைப்பு செயலாளர் திரு.S.K.தேவதாஸ், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.கா.டேவிட் அண்ணாதுரை, கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.வேலு கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 1-ம் தேதி, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த மாவட்டங்களுக்கு கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.K.K.உமாதேவன், கழக அமைப்பு செயலாளர், திரு.I.மகேந்திரன், கழக அமைப்பு செயலாளர் திரு.R.தங்கதுரை ஆகியோர் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.S.V.S.P.மாணிக்கராஜா, ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் திரு.N.G.பார்த்திபன், கழக அமைப்பு செயலாளர் டாக்டர்.இல.கதிர்காமு, அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.R.செல்வபாண்டி ஆகியோர் இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 2-ம் தேதி, நாமக்கல் வடக்கு, நாமக்கல் தெற்கு, நாமக்கல் மேற்கு மற்றும் கரூர் மேற்கு மாவட்டங்களில் அமமுகவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த மாவட்டங்களுக்கு, கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன், கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.P.பழனியப்பன் ஆகியோர் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவில், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.C.சண்முகவேலு, கழக அமைப்பு செயலாளர்கள், வீரபாண்டி திரு.S.K.செல்வம், திரு.I.மகேந்திரன், கழக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.S.முத்தையா, கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு.குட்வில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 2-ம் தேதி, திருவள்ளூர் கிழக்கு மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டங்களில் அமமுகவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த மாவட்டங்களுக்கு திரு.G.செந்தமிழன் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வுக்குழுவில், செல்வி C.R.சரஸ்வதி, திரு.R.சுந்தரராஜ், திரு.ம.கரிகாலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 2-ம் தேதி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமமுகவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த மாவட்டங்களுக்கு, திரு.K.K.உமாதேவன், திரு.கா.டேவிட் அண்ணாதுரை ஆகியோர் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவில், திரு.S.V.S.P.மாணிக்கராஜா, திரு.N.G.பார்த்திபன், டாக்டர்.இல.கதிர்காமு, கழக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ரயில்வே திரு.S.பரமநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 3-ம் தேதி, கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டங்களில் அமமுகவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த மாவட்டங்களுக்கு, திரு.P.பழனியப்பன், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.பாலசுந்தரம் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.M.ரெங்கசாமி, கழக அமைப்பு செயலாளர்கள் திரு.R.தங்கதுரை, திரு.D.K.ராஜேந்திரன், திரு.K.S.K.பாலமுருகன், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் திரு.P.முத்துக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.