விபத்தில் உயிரிழந்த ஊராட்சி மன்றத் தலைவருக்‍கு டிடிவி தினகரன் அஞ்சலி

சாலை விபத்துகளில் நம்முடைய கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பதும், காயமடைவதும் மிகுந்த துயரத்தையும் மனவேதனையும் அளிப்பதாக அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தஞ்சை செங்கிப்பட்டி அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்த தேனி வடக்கு மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம் மொட்டனுத்து ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பி.கே.ராஜன் என்கிற கருப்புவின் உடலுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்துள்ளார். 

கழக நிகழ்ச்சிகளுக்காகவும், சொந்த பணிகளுக்காகவும் சாலை மார்க்‍கமாக பயணிக்கும் கழக உடன்பிறப்புகள் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் பயணிக்கவேண்டுமென பலமுறை வலியுறுத்தி இருந்ததையும் அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார். 

சாலை விபத்துகளில் நம்முடைய கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பதும், காயமடைவதும் எனக்கு மிகுந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது. ஆகவே, கழக உடன்பிறப்புகள் எச்சரிக்கையோடு பயணங்களை மேற்கொள்ளவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்வதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.