எப்போதும் நம் இதயங்களில் நாவலர் வாழ்வார் டிடிவி தினகரன்

‪திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர். நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள் இன்று. பேரறிஞர் அண்ணா அவர்களால் “ நடமாடும் பல்கலைக்கழகம்” எனக் கொண்டாடப்பட்டவர்.‬

‪புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு பெரும் மக்கள் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இறுதி மூச்சு வரை அம்மா அவர்களுக்கு உண்மையானவராகவும், கழகத்தின் மீது மாறாத பற்று கொண்டவராகவும், தீயசக்திகளை எதிர்ப்பதில் உறுதியானவராகவும் திகழ்ந்தவர்.‬

‪தமிழ் உணர்வால், கொள்கைப்பற்றால், எப்போதும் நம் இதயங்களில் நாவலர் வாழ்வார்!‬