விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அமமுக நிர்வாகிகள் நியமனம்

விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அமமுகவின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமமுகவின் நெசவாளர் அணி செயலாளராக திரு.தரணி A.ஷண்முகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக திரு. N.S. துரைராஜ், திருமதி. கீதா சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கிழக்கு மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மேற்கு, தூத்துக்குடி தெற்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி வடக்கு, கோவை வடக்கு, வேலூர் மாநகர் மாவட்டங்களுக்கும், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாந்தோணிமலை ஒன்றியம் "தாந்தோணிமலை கிழக்கு" மற்றும் "தாந்தோணிமலை மேற்கு" என பிரிக்கப்பட்டு, தாந்தோணிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.S.K.வேலுச்சாமி, தாந்தோணிமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.P.நல்லுசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தோகமலை ஒன்றியம் "தோகமலை கிழக்கு" மற்றும் "தோகமலை மேற்கு" என இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, தோகமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.R.வேலுச்சாமி, தோகமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளராக திரு. V.மணிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.